என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெளத்தம்"
- ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல்.
- பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.
அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை. நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி, பௌத்த முறைப்படி இறுதிச் சடங்கு முடிந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக பொத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பெரம்பூரில் இருந்து மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா வழியாக இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.
அடக்கம் செய்யும் இடத்தில் ஆவடி கூடுதல் ஆணையர் தலைமையில் 300 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.