search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "78 பேர் பலி"

    • அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது.
    • மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மதிக்கின்றன. மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று அசாமுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றார். இன்று காலை அசாமின் சில்சாருக்கு சென்றடைந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பின்னர் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    அசாம் பயணத்துக்கு பிறகு ராகுல்காந்தி மணிப்பூருக்கு செல்கிறார். மணிப்பூரில் மெய்தி-குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தற்போதும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மணிப்பூருக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே அவர் மணிப்பூருக்கு இரண்டு முறை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். தற்போது எதிர்கட்சித்தலைவரான பிறகு முதன் முறையாக ராகுல்காந்தி மணிப்பூர் செல்கிறார்.

    ×