என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுசூழல் அமைப்பு"
- வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
- ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.
உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.

நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.
ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழமுடியாது.
இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது.
- கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது
- இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது
ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனதிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளைக்கு 'ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுக்கு தான் தற்போது நடிகரின் பெயர் சூட்டப்பட்டது
புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இவை கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உள்ளவை . இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் நாயகனும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வளம் வருபவருமான லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்டவர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு 'லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை'யை நிறுவினார்.
ஈக்வடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த இவரது அறக்கட்டளை குரல் கொடுத்தது. எனவே அவரது முயற்சிகளை கவுரவிக்கும் வகையில் தவளைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
'ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.