என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாகேந்திரன் கைது"
- மோசடி தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- நாகேந்திரன் மற்றும் பசனகவுடா தாடால் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கர்நாடகா மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் (52) என்பவர் கடந்த மே மாதம் 26-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மாநகராட்சி வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கர்நாடக வால்மீகி வளர்ச்சிக்கழகத்தின் நிதி தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த முதல் நிதிக் கடன் கூட்டுறவு சங்கத்தின் வங்கி கணக்குகளுக்கு மாநகராட்சி கணக்கில் இருந்து முறைகேடாக பணம் மாற்றப்பட்டதும் பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி பணத்தை எடுத்துள்ளதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் மற்றும் ராய்ச்சூர் ஊரக சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில மகரிஷி வால்மீகி நிகாம் தலைவருமான பசனகவுடா தாடால் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நாகேந்திரன் மற்றும் பசனகவுடா தாடால் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள டாலர்ஸ் காலனி வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சரும், பெல்லாரி ஊரக சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நாகேந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது நாகேந்திரனிடம் ரூ.187 கோடி ஊழல் தொடர்பான பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்