என் மலர்
நீங்கள் தேடியது "சட்டவிரோத பண பரிமாற்றம்"
- 14 நாட்கள் அமலாக்கத்துறை காவல் மனு மீது நாளை விசாரணை.
- சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க முயற்சி.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை ஜூலை 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 நாட்கள் அமலாக்கத்துறை காவல் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என்று ஜாபர் சாதிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் பெயரை கூற வேண்டும் என வற்புறுத்தி வருவதாக ஜாபர் சாதிக் நீதிபதியிடம் புகார் அளித்தார்.
அதன்படி, ஜாபர் சாதிக்கை நாளை வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
- அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை 302 பக்கங்களை கொண்டுள்ளன.
- இயக்குநர் அமீரின் பெயர் 12 ஆவதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் அமீரின் பெயர் 12 ஆவதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
சட்டவிரோத பணத்தை அமீர் கையாண்டதாக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது. குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, ஜாபர் சாதிக் சகோதரர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை 302 பக்கங்களை கொண்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக் சினிமா நிறுவனம் உள்பட எட்டு நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடை 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
- ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன
சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை செய்தது. சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.