search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ்"

    • இந்தியாவை முன்னேற்றும் இலக்கின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டு சிலாகித்தார்.
    • கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்பபோவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    மத்தியப்  பிரதேச மாநிலத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் திட்டத்தை நேற்று காணொளி காட்சி வாயிலாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2047 க்குள் இந்தியாவை முன்னேற்றும் இலக்கின் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட மோடியின் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டு சிலாகித்தார்.

     

    இந்நிலையில் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் நடந்த பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ பன்னலால் ஷக்யா, படித்து டிகிரி வாங்குவதால் எந்த பயனும் இல்லை, மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நாம் இன்று பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸஸை தொடங்கி வைக்கிறோம். கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்பபோவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். டிகிரி வாங்குவதால் எந்த பயனும் இல்லை, எனவே மாணவர்கள் குறைந்தபட்சம் மோட்டார் சைக்கிள் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ×