என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய வானிலை மைம்"
- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலையில் ஒடிசா கடற்கரை பூரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலையில் ஒடிசா கடற்கரை பூரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி தாழ்வு மண்டலம் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவில் நிலை கொண்டுள்ளது. பூரிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தென்மேற்கு மற்றும் கோபால் பூருக்கு கிழக்கு வடகிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் கரையை கடந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக வட கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி ஏற்படும். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழை செய்யக்கூடும்.
நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இனி படிப்படியாக மழை குறையும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
- அப்போது, மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆறு மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ள நீர் தேங்கும் பட்சத்தில் பயிர்கள் சேதம் அடைவதைத் தடுக்க நடவடிக்கை அவசியம்.
நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
முன்கூட்டியே மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.