search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொக்கு"

    • புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    • நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் – ½ கிலோ

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

    வெந்தயம் – ½ ஸ்பூன்

    பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்

    புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு

    நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

    கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    உப்பு – தேவையான அளவு

    மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

    மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்

    பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    • சின்ன வெங்காயத்தை நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

    • பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ½ டீஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


    • புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    • பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடுபடுத்தவும்.

    • எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    • வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    • பிறகு 1½ டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

    • தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

    • இரண்டு நிமிடம் கழித்து ஓரு ஸ்பூன் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் வேகவைத்தால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.

    குறிப்பு: இந்த வெங்காயம் தொக்கு செய்ய சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். மேலும் புளி ஊறவைக்கும் போது தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி ஊறவைக்கவும். நிறைய ஊற்றிவிட வேண்டாம்.

    ×