என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காந்தி படுகொலை"
- 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு படேல் தடை விதித்தார்
- பிரதமர் வாஜ் பாய் தலைமையிலான பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்கவில்லை
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.
சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1966 வாக்கில் பசுக்கொலைகளுக்கு போராடுகிறோம் என்று வெகுஜன ஆதரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு திரட்டி போராட்டம் நடந்தத் துவங்கியது. இதன் உச்சமாக பாராளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக ஆட்சி அமைந்த போதும் பிரதமர் வாஜ் பாய் ஆர்எஸ்எஸ் மீதான இந்த தடையை நீக்காத நிலையில் தற்போது 3 வது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பது சமீப காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கதசிகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.
இந்த தடை நீக்கம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்