என் மலர்
நீங்கள் தேடியது "ஏ.ஐ. தொழில் நுட்பம்"
- மதன் கார்க்கி ‘முடிவிலி’ என்னும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
- முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது 'முடிவிலி' என்னும் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது பற்றி மதன் கார்க்கி கூறியதாவது:-
நான் உருவாக்கியுள்ள முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடலை பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
வருகிற 26-ந் தேதி ஸ்பார்ட்டி பைவ் மற்றும் சில வலைதளங்களில் இந்த இசை ஆல்பம் வெளியாகிறது. என் தந்தை வைரமுத்து ஆல்பத்தை கேட்டு விட்டு நன்றாக பாராட்டினார்.
மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருப்பது பற்றி வியந்து கேட்டார்.
ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் ஆபத்து கிடையாது. கிராம போன் வரும்போது பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதிர்ப்புகளை மீறி கிராமபோன் அறிமுகமானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் அதில் பண்ணி விட முடியாது. அதற்கும் மனிதன் தேவைப்படுகிறான்.
மனிதனின் கட்டளைப்படி தான் ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் எதையும் உருவாக்க முடியும். புதிதாக அனிமேஷன் கிராபிக்ஸ் பணிகளுக்கு அடையாறில் 'பா' என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கியுள்ளேன்.
திரைப்படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் இங்கு நடைபெறுகிறது. புராண கதையில் இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன். படத்தில் சூர்யா, ஜான்வி கபூர் இணைந்து நடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது.
ஏ.ஐ. தொழில் நுட்பம் சினிமா துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்கள் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடிகிறது.
விஜய்யின் 'தி கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் பாடல் இடம்பெற்றது. ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா, ஷாகில் ஆகியோரின் குரலில் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி இருந்தார்.

'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்த அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறும்போது, "ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை பயன்படுத்த அனுமதி கேட்டு பலர் என்னிடம் பேசி வருகிறார்கள்.
ஆனால் நான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன். ஏ.ஐ. மூலம் அவரது குரலை கேட்க எங்களுக்கு விருப்பம் இல்லை. ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது.
- கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்
நம் வாழ்வில் இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது இருந்துதான் தீரும். ஆதலால் நாம் கண்டிப்பாக ஒருநாள் மரணமடைவோம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம் மரணம் எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் தற்போது உலகில் வளர்ந்து தொழில்நுட்பம் நாம் எப்போது இறப்போம் என்பதையும் துல்லியமாக கணிக்க ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
மனிதனின் அறிவையும் தாண்டி ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. அவ்வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரண கடிகாரம் (Death Clock) என்ற ஆப் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆப் ஒரு நபர் எப்போது மரணமடைவார் என்று துல்லியமாக கணித்து கூறுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதே இந்த ஆப்பின் வெற்றியை சொல்கிறது.
இந்த ஆப் சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200 க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியைக் கணிக்கின்றது.
தற்போது அமெரிக்காவில் வாழும் 85 வயது முதியவர் ஒருவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10% எனும் சராசரியாக இன்னும் 5.6 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்றும் மரண கடிகாரம் (Death Clock) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.