search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம் தொழிலதிபர்கள்"

    • தமிழ்நாட்டில் 2023-24 ஆண்டு 8,475 சொகுசு கார்கள் விற்பனை.
    • கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட இது 46.2% அதிகம்.

    தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, பி.எம்.டபுள்யூ, ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தமிழ்நாட்டில் அதிகளவிலான சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2019-2020 ஆம் ஆண்டில் 4,187 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், 2020-21ல் 2,816 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்றால் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. பின்னர் 2021-22 ஆம் ஆண்டில் 3,954 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன.

    பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் 5797 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டு 8,475 ஆக அதிகரித்துள்ளது.

    இது கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட 46.2% அதிகமாகும்.

    2023-24 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,192 பி.எம்.டபுள்யூ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து 1,122 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் 217 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் 84 போர்ஷே கார்களும் 77 ஆடி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 1668 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4 ரோல்ஸ் ராய்ஸ் காட்களும் அடங்கும்.

    இதற்கு அடுத்ததாக கோவையில் 510 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 110 கார்களும் திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 65 கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கொரோனாவிற்கு பிறகு நிறைய இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், சொகுசு கார்களை வாங்கும் 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ×