search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகிலா விமல்"

    • மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை.
    • வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

    படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், கிராமத்து பொதுமக்கள் பங்கேற்றனர்.

    விழாவிற்காக கிராம மக்கள் 2 பேருந்துகளில் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-

    வாழை படம் இந்த அளவுக்கு நன்றாக வருவதற்கு காரணம் என் முந்தைய பட தயாரிப்பாளர்கள்தான். நான் படம் பண்ணும் போது அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார்கள்.

    வாழை படத்தை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு வசூலாக எப்படி பண்ணும்னு தெரியல. ஆனால் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியில் பூங்கொடி டீச்சர் (நிகிலாவிமல்) ஏன் வரவில்லை என்று பலரும் கேட்டனர்.

    அவரது தேதி அப்போது கிடைக்கவில்லை. கடைசியில் அம்மா மடியில் சிவனானந்தன் படுத்திருப்பான். அம்மாவிற்கு பதில் டீச்சர் மடியில் படுத்திருக்கிற மாதிரிதான் காட்சி இருக்க ஆசைப்பட்டேன். விபத்தின் போது இஸ்லாமிய சகோதரர்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.

    வாழை படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன். முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் கதையை சிவனானந்தனை வைத்து எடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை.
    • இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் பாடல் ஜூக் பாக்ஸ் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் அவரது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் நாட்களில் மக்களின் ஆதரவை இன்னும் அதிகமாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
    • மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நடிகை நிகிலா விமல் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நிகிலா விமல், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×