search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமநாயகி அம்பாள்"

    • இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.
    • சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    மகாமகம் சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான சிவ ஸ்தலம் இது.

    மகா பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் சிதைத்தார்.

    அப்போது அமுத கலசத்தை தாங்கிக் கொண்டு வந்த "உறி", இந்த இடத்தில் விழுந்து பின்னர் லிங்கமாக மாறிற்று.

    உறிக்கு மறு பெயர் சிக்கம். எனவே இந்த சிவலிங்கத்திற்கு முதலில் சிக்கேசர் என்று பெயர் வந்தது.

    நவகிரகங்களில் ஒன்றான சந்திரன் தான் செய்த தவறுக்காக குருவான பிரகஸ்பதியின் சாபத்திற்கு உள்ளானான்.

    தனது சாபத்தைப் போக்க சிவபெருமான் தான் கருணை காட்ட வேண்டுமென்று எண்ணி இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானான சிக்கேசரை வழிபட்டு வந்தான்.

    தினமும் தான் நீராடுவதற்காக இங்குள்ள இறைவன் சன்னதிக்கு வலப்புறத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான் சந்திரன்.

    இறைவனும் சந்திரனுடைய வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவனுக்குத் தரிசனம் தந்தார்.

    எனவே இறைவனுக்கு சிக்கேசர் என்ற பெயர் மாறி சோமேஸ்வரர் என்று புதுப் பெயர் வந்தது. அம்பாளுக்கு சோமநாயகி என்று பெயர் உண்டாயிற்று.

    வியாழ பகவான் இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.

    மகப்பேறு வேண்டும் என்பதற்காக பராந்தக சோழன் இந்த லிங்கத்தை வழிபட்டதால் லிங்கம் சோழீசர் என்று பெயர்க்காரணம் ஏற்பட்டது.

    இத்தலத்திலிருக்கும் தேனார் மொழியம்மை இறைவனது திருமேனியை ஆரோகணித்ததால் காரோணம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.

    சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    சந்திரதோஷம், குருதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும்.

    மாதவரை விட தூமகேது இங்குள்ள வருண தீர்த்தத்தால் இறைவனுக்கு சதா சர்வ காலமும் பூஜை செய்து வணங்கி வர இறைவனும் தூமகேதுவுக்கு காட்சியளித்தார்.

    தூமகேதுவின் வேண்டுகோள்படியே இறைவன் இங்கு நிரந்தரமாக தங்கி தூமகேதுவுக்கு அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள தீர்த்தம் தூமகேது தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

    ×