என் மலர்
நீங்கள் தேடியது "சிறந்த திரைப்படம்"
- 70 வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- குல்மோஹர் திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை வென்றது.
70 வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிலா தாகூர் நடிப்பில் வெளியான குல்மோஹர் திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை வென்றது.
இப்படத்தை ராகுல் வி சித்தெலா இயக்கினார். நடிகை ஷர்மிலா 13 வருடங்களுக்கு பின் இப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மற்றமொழிப்படங்களான சிறந்த பஞ்சாபி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெறுகிறது BAGHI DI DHEE திரைப்படம்.
சிறந்த ஒடியா மொழி திரைப்படமாக DAMAN திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
- பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ள அயலி ஜீ5 தளத்தில் வெளியானது.
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.
இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு அயலி பிரந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு தமிழில் வெளியான அயலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதில், காலாபாணி, கோட்டா ஃபேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- திகில் காட்சிகள் நிறைந்த சிறந்த ஹாரர் ஹாலிவுட் திரைப்படங்களை இச்செய்தியில் காணலாம்.
- இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலின் மற்றும் கேமரான் இணைந்து இயக்கியுள்ளனர்.
திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கதைக்களம் உள்ள திரைப்படத்திற்கு எப்பொழுதும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. என்னதான் தமிழில் ஏகப்பட்ட திகில் திரைப்படங்கள் வந்தாலும். அவை எதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் கொடுக்கும் பயத்தையும் திகில் உணர்வையும் பார்வையாளர்களுக்கு கடத்த தவற விடுகிறது. இதனால் இந்தாண்டு திகில் காட்சிகள் நிறைந்த சிறந்த ஹாரர் ஹாலிவுட் திரைப்படங்களை இச்செய்தியில் காணலாம்.
லேட் நைட் வித் தி டெவில் {Late Night with the Devil}
இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலின் மற்றும் கேமரான் இணைந்து இயக்கியுள்ளனர். தாஸ்ட்மல்சியன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு நேரடி தொலைக்காட்சில் நடக்கும் அமானுஷ்யங்கள் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தி ஃபர்ஸ்ட் ஓமன் {The First Omen}
1976 ஆம் ஆண்டு தி ஓமன் என்ற கிளாசிக் ஹாரர் திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மார்கிரட் என்ற பெண் கான்வெண்டில் சேர்கிறார். அங்கு அவருக்கும் கார்லிடா என்பவருடன் நல்ல நட்பு ஏற்படுகிறது. அந்த கான்வெண்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடைப்பெற்று வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை சுற்றியே இக்கதை நகரும். இந்நிலையில் இயக்குனர் அர்கஷா லாஸ்ட் ஓமன் திரைப்படத்தை அதன் தொடர்ச்சிலேயே இயக்கியுள்ளார். இப்படமும் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எக்ஸ்ஹுமா {Exhuma}
எக்ஸ்ஹுமா ஒரு கொரியன் திரைப்படமாகும். இப்படம் கொரியாவின் கலாச்சார பின்னணியில் உருவாகிய ஒரு ஹாரார் திரைப்படமாகும். இப்படம் இறப்பிற்கும் ஆன்மாவிற்கும் இடையே உள்ள கொரியன் மக்களின் நம்பிக்கை அடிப்பைடையில் அமைக்கப்பட்ட கதைக்களமாகும். இப்படம் வெளியாகி கொரியன் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் ஜாங் ஜே ஹுன் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். நிறைய திகில் மற்றும் பயப்பட வைக்கும் காட்சிகள் இல்லை என்றாலும். அடுத்து என்ன அடுத்து என்ன என தூண்டும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆடிட்டி {Oddity}
இப்படத்தை ஐரிஷ் இயக்குனரான மெக் கார்தி இயக்கியுள்ளார். இப்படம் ஊரில் புதிதாக குடி வந்த தம்பதிகளின் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைக்களமாகும். மனைவி வீட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார். கணவன் அந்த ஊரில் உள்ள மனநல மருத்துவமனையில் வேலைபார்த்து வருகிறார். ஒருநாள் அவர் மருத்துவமனைக்கு செல்ல அங்கு இருந்து தப்பித்த ஒரு மனநல நோயாளி தப்பித்து கதாநாயகி தனியாக இருக்கும் போது வீட்டிற்கு வருகிறார் இதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹெரெடிக் {Heretic}
இப்படம் மூன்று கதாப்பாத்திரங்கள் ஒரு லொகேஷனில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. ஆனாலும் மூன்று கதாப்பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள். அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் பார்வையாளர்களை மிரளவைக்கிறது. இப்படத்தை ஸ்காட் பெக் மற்றும் பிரயான வூட்ஸ் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு வெளியான சிறந்த ஹாரர் திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.