என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நித்யாமேனன்"

    • சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
    • திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ளது.

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.

    சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதை வென்றனர்.

    திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து அப்படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையான தெரியும் நடிப்பிதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துக்கொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி.

    சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையான உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.

    இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
    • இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது.

    இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×