என் மலர்
நீங்கள் தேடியது "பலன்கள்-பரிகாரங்கள்"
- கிருத்திகை ராசி மண்டலத்தின் 3-வது நட்சத்திரமாகும்.
- சூரியனின் நட்சத்திரமாகும்.
கிருத்திகை ராசி மண்டலத்தின் 3-வது நட்சத்திரமாகும். இது சூரியனின் நட்சத்திரமாகும். இதன் முதல் பாதம் செவ்வாயின் மேஷ ராசியிலும் 2, 3, 4ம் பாதங்கள் சுக்ரனின் வீடான ரிஷபத்திலும் உள்ளது. இந்த நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் கூரிய கத்தி போல் காட்சியளிப்பதால் இதற்கு கிருத்திகை என்று பெயர் வைக்கப்பட்டது.
இதன் தமிழ் பெயர் ஆரல் என்பதாகும். ஆரல் என்றால் தீச்சுடர் என்று பொருள்.இது ஒரு பெண் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4ம் பாதங்கள் கழுத்து, தாடை, முகம் போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது.

கிருத்திகை நட்சத்திர பலன்கள்
இது சூரியனின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் என்பதால் ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு.
சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அழகிய தோற்றப் பொழிவு நிறைந்தவர். முன் கோபமும் அதிகமிருக்கும். ஆடம்பரமான, பகட்டான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும்.
புத்திக் கூர்மை, விவேகம் நிறைந்தவர்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.
தந்தையின் ஆதரவு உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் அடைவார்கள் . பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். முன்னோர் வழி குலத் தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள்.
எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து விதமான நன்மைகளையும் அடைவார்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு டையவர்கள். தொட்டது துலங்கும்.
நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடி வரும்.தொழிலுக்கு அரசு ஆதரவு உண்டு.பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. மற்றவர்களிடம் எதற்காவும் கையேந்த விரும்ப மாட்டார்கள். தங்களின் தேவைகளை தாங்களே சமாளிக்கும் திறமை உள்ளவர்கள். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் வாழ்க்கையில் சில இடர்களை சந்திக்க நேரும்.
கல்வி
கல்வியில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார்கள். கிருத்திகை சூரியனின் நட்சத்திரம் என்பதால் நிர்வாகம் சம்பந்தமான படிப்பு, பொருளாதாரம், வணிகவியல், மருத்துவம், ஜெம்மாலஜி, ஜோதிடம் போன்ற படிப்பில் அதிக நாட்டம் உண்டு.
தொழில்
முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடம் கூட வேலை பார்க்க மாட்டார்கள். நானே ராஜா, நானே மந்திரி என்ற எண்ணத்துடன் வாழ்வார்கள். அதிகார பதவிகள், அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும்.
சுய தொழில், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், அதீத ஆர்வம் உள்ளவர்கள். ஜோதிடம், ஆன்மிகம் போன்ற கலைகளில் ஈடுபாடு உண்டு.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு. வாழ்க்கைத் துணையுடன் கெத்தாக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.
தொழில் சம்பந்தமாக அடிக்கடி குடும்ப உறவுகளை பிரிந்து வாழ்வார்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணிகலன்கள் மிகவும் மதிப்பாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப கவுரவத்தை காப்பாற்றவதில் அதீத அக்கரையுடன் இருப்பார்கள். தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும்.
திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு.
தசா புத்தி பலன்கள் சூரிய தசா:
இவர்களுக்கு முதல் தசா சூரிய தசாவாகும். இது 6 வருடம் உள்ள சிறிய தசா. பிறப்பில் மீதம் உள்ள தசா வருடத்திற்கு ஏற்ற பலன் நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரம். இது பால் பருவம் என்பதால் சிறு சிறு உஷ்ண நோய் தாக்கம் இருக்கும். தந்தையின் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். தந்தைக்கு அரசு உத்தியோகம் அரசியல் ஆதாயம் உண்டு.
சந்திர தசா
இதன் கால அளவு 10 வருடம். பள்ளிப்பருவம். இது தன தாரையின் நட்சத்திரம் என்பதால் சந்திரன் பலம் பெற்றால் இளம் பருவத்திலேயே சம்பாதிக்க துவங்குவார்கள். பெற்றோர்கள் நல்ல தொழில், உத்தியோகத்தில் பணியாற்றுவார்கள். சூரியன், சந்திரன் பலம் குறைந்தால் தாய், தந்தையின் ஆதரவு கிடைக்காது.
குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நேரும். பொருளாதார தட்டுப்பாடு அதிகம் இருக்கும்.வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும்.
செவ்வாய் தசா
இது 7 வருடம் கொண்ட தசாவாகும். வாலிப பருவம். பள்ளி, கல்லுரி படிப்புகளை கடக்கும் பருவம். பேச்சிலும் முடிவெடுப்பதிலும் வேகமாக செயல்படுவார்கள். மற்றவர்களுக்கு புரியவில்லை என்றால் கோபம் எளிதில் வந்து விடும். வீரதீரச் செயலினால் புகழ் உண்டு. விபத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
ராகு தசா
இதன் தசா வருடம் 18. பல விதமான முதல் திருமணம் குழந்தை, வேலை, தொழில் என முக்கிய சம்பவங்கள் நடக்கும் காலகட்டம்.சேஷம தாரையின் தசை என்பதால் புதிய மனிதர்கள் ஆதரவு உண்டு.
புதுப்புது கருத்துக்களை தன்னையறியாமல் வெளிப்ப டுத்துபவர். பிறர் யோசனைப்படி நடக்க மாட்டார்கள். சமயோசிதபுத்தி,வேடிக்கையாக பேசும் திறன், மேதாவித் தனம் இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை க்கு செல்வார்கள். எந்த வயதினராக இருந்தாலும் நிச்சயம் காதல் வலையில் சிக்குவார்கள். புதிய சாதனைகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற பிரமாண்ட விருப்பம், திட்டமிடுதல் இருக்கும். காதல் திருமணத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.
குரு தசா
இதன் தசா வருடம் 16 ஆண்டுகள். இது பிரத்யக் தாரையின் தசாவாகும். ஒருவிதக் குருட்டுத் தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்து கொண்டே இருக்கும். இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். எல்லாத் துறையிலும் தனித் தன்மையுடன் ஜொலிப்பவர்கள் பலர். வீடு, வாசல் என நிலையாக வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள்.
சனி தசா
இது 19 வருட காலம் உள்ள பெரிய தசாவாகும். சாதக தாரை ஏனும் 6-வது தசாவாகும். இந்த தசை முடியும் முன்பு பெரும்பான்மை யாக 70 வயதை கடப்பார்கள். வயோ திகத்தால் ஓய்வை மனம் விரும்பும். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர்.
புதன் தசா
இதுவும் 17 வருடம் கொண்ட தசாவாகும். இது வரை தாரையின் தசா. சற்று முன் கோபம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு, காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியம் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேது, சுக்ர தசை நடக்கும் வாய்ப்புகள் குறைவு.
கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள் கத்தி அல்லது வாள் போன்ற உருவத்துடன் காட்சி தருவதால் மரம் வெட்ட, மண் தோண்ட, சுரங்கம் தோண்ட சிறந்த நட்சத்திரமாகும். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் சுப காரியம் செய்ய உகந்ததல்ல. ஆனால் பரிகாரங்கள் செய்வதற்கு உடைபட்ட நட்சத்திரங்களே சிறப்பு உடையது.
இந்த நட்சத்திரம் கடனுக்கு காரக கிரகமான செவ்வாயின் வீட்டிலும் பண வரவிற்கு காரக கிரகமான சுக்ரன் வீட்டிலும் உள்ளது. மீள முடியாத கடன் தொல்லையில் இருப்பவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும். பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும் ஆண் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.
திருமணத் தடை இருப்பவர்கள் தொடர்ந்து 6 மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வர திருமணத் தடை அகலும். செவ்வாய், சுக்ரன் வீட்டை இந்த நட்சத்திரம் இணைப்பதால் திருமணம் ஆகி பிரிந்து வாழும் இந்த நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிபட தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள்.
கிருத்திகை நட்சத்திரம் ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் பெறுவதால் உயிர் குல பெண்மணிகள் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்களை சந்திக்க உகந்த நட்சத்திரமாகும்.கலைத்துறையினர் மற்றும் கவிஞர்கள் கிருத்திகை விரதமிருந்து சென்னை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட்டால் நிச்சயமாக அவர்களுடைய எண்ணம் நிறைவேறும். புகழின் உச்சிக்குச் செல்வார்கள்.
நட்சத்திர பட்சி: மயில்
யோகம்: ஆயுஸ்மான்
நவரத்தினம்:மாணிக்கம் தலை
உடல் உறுப்பு:தலை
திசை:கிழக்கு
பஞ்சபூதம்:நிலம்
அதிதேவதை:அக்னி தேவதை
நட்சத்திர மிருகம்: பெண் ஆடு
நட்சத்திர வடிவம்: கத்தி, வாள்
நன்மை தரும் நட்சத்திரங்கள்:
சம்பத்து தாரை:ரோகிணி, அஸ்தம், திருவோணம்
சேம தாரை: திருவாதிரை, சுவாதி, சதயம்
சாதக தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பரம மிக்ர. தாரை: பரணி, பூரம், பூராடம்.

பரிகாரம்
இது சூரியனின் நட்சத்திரம் என்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம். ஜென்ம நட்சத்திர நாளில் வறிய நிலையுள்ள ஆடு அல்லது மாடு வளர்ப்பவர்களின் தேவையறிந்து இயன்ற உதவி செய்ய வேண்டும். முருகன் மற்றும் சிவ வழிபாடு அனைத்து விதமான நன்மைகளையும் பெற்றுத்தரும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது முருகவழிபாடு செய்தல், ரத்த தானம் செய்தல், தாழம்பூ குங்குமம் தரித்தல் போன்றவை சிறப்பான பலன் தரும். இவர்களின் சாதக தாரையான 6வது நட்சத்திர நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறும்.
- நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றலாம்.
- கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மன சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம்.
1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
2. இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30-12.00) ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

3. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
4. கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
5. ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6. ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
7. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
8. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும். 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
9. கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
10. ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
11. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.
12. பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
13. மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
14. கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15. வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடைபெறும்.
16. சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
17. இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
18. செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
19. விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
20. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
21. பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
22. புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
23. வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
24. பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
25. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
26. தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.
27. எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழைத் தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.