என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கங்குவா அப்டேட்"
- எதிர்மறையான விமர்சனங்களால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
- உலகம் முழுவதும் ரூ.127 கோடி வசூல்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு நெகடிங் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது.
அதேநேரம், ரசிகர்கள் தரப்பிலிருந்து படத்தின் வசனம் மற்றும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலியாக கங்குவா படத்தில் 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட படத்தின் ஆரம்பக் காட்சிகளே பெரும்பாலும் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த கங்குவா, தற்போது ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி, 'கங்குவா' படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.127 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது.
- ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற 13-ம் தேதிக்குள் சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, டிசம்பர் 11ம் தேதிக்குள் ரூ.3.75 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் பெற்ற ரூ.10.35 கோடி கடனை வசூலிக்க சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இந்தி உரிமை வழங்குவதாக கூறி பெற்ற ரூ.1.60 கோடியை திரும்ப தரக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ரூ.1.60 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடி செலுத்திய நிலையில் மேலும் ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
- 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
- டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22-ந் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.
இந்த இரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஃபயர் சாங்...' எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இதையடுத்து கடந்த மாதம் படத்தின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படி அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த படக்குழு அக்டோபர் 10-ந் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வருவதால், அந்த தேதியில் படம் வெளியாகவில்லை என சமீபத்தில் நடந்த கார்த்தியின் மெய்யழகன் பட இசை வெளியீட்டில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புது ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
The Battle of Pride and Glory, for the World to Witness ⚔?#Kanguva's mighty reign storms screens from 14-11-24 ?#KanguvaFromNov14 ? @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations… pic.twitter.com/de3yYAL0BI
— Studio Green (@StudioGreen2) September 19, 2024
- கங்குவா அக்டோபர் 10-ந்தேதி வெளியாகிறது.
- வெளிநாட்டு உரிமைகளை PHARS FILMS நிறுவனம் வாங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம்தான் கங்குவா.
வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தபடம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 10-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் "கங்குவா" படத்தின் முழு வெளிநாட்டு உரிமைகளையும் PHARS FILMS நிறுவனம் 40 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் வெளிநாட்டு திரையரங்கு உரிமைகளுக்காக இந்திய படத்திற்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். ஒரு மல்டிஸ்டாரர் பெரிய பட்ஜெட் இந்தி படம் கூட இதற்கு முன் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே அதிக தொகைக்கு விற்பனையான படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்