என் மலர்
நீங்கள் தேடியது "மீனாட்சி கோவிந்தராஜன்"
- ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '.
- . இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ் ஸ்டோரி '.
தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
.இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார்.
2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தற்பொழுது மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலை வியன் புகழேந்தி வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். இப்பாடல் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர்.
- மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்பொழுது மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர். இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் .
- ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் . இப்படத்தை பிரதாப் இயக்கினார். ஜெய் உடன் இப்படத்தில் யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா, மற்றும் பலர் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பாபு விஜய் BV Frames நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளது.
விஜய் பாபு இதற்குமுன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சென்னை, கொடைக்கானல், நெல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கபடவுள்ளது. இதனை குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.