என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிகா சுரேந்திரன்"

    • `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் தனுஷ்.
    • இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேர்ரோ’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

    இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தனர்.

    இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இப்பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரமான 7 நயர்களும் இருக்கிறனர்.

    இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் இயக்குகிறார்.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ரோம்-காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் `கோல்டன் ஸ்பேரோ' வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றுவரை இந்தப் பாடலின் வியூஸ் மற்றும் ரீல்ஸ் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     


    இந்த நிலையில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தின் 'காதல் ஃபெயில்' பாடல் வருகிற 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடல் ஜென் Z சூப் பாடல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் 4-வது பாடலான புள்ள பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலின் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
    அஜித் தற்போது `விஸ்வாசம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர். 

    சமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும், கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. 


    இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடித்து வரும் விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கும் இமான், இந்த படத்திலும் தனது கைவரிசையை காட்டுகிறாராம். #Viswasam #AjithKumar
    சிவா இயக்கத்தில் 4-வது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அஜித் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்துக்கு இமான் இசை அமைக்கிறார். இமான் எப்போதுமே கிராமிய கலைஞர்களை பாட வைத்து விடுவார். 

    விஸ்வாசம் படத்திலும் ஒரு கிராமிய கரகாட்ட பாடல் இடம்பெறுகிறது. அஜித்துடன் இணைந்து தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. வேதாளம், விவேகம் என நகரத்து கதைகளில் நடித்து வந்த அஜித், விஸ்வாசம் படத்தில் கிராமத்து நபராக நடிக்கிறார்.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #Viswasam #AjithKumar

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விஸ்வாசம்' படம் குறித்து பரவி வந்த வதந்திக்கு, அஜித்தின் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விளக்கம் அளித்துள்ளார். #Viswasam #AjithKumar
    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ஐதராபாத்தில் அரங்கு அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் நடக்கும் கதை என்றும், பிளாஷ்பேக்கில் ஒரு அஜித்குமார் வட சென்னை தாதாவாக வருவதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனினும் படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 



    சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேநேரத்தில் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் விஸ்வாசம் படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. 

    இந்த நிலையில், தான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை என்றும், காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தில் தான் நடித்து வருவதாக கபிர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Viswasam #AjithKumar

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம் என்று படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். #Viswasam #AjithKumar #Nayanthara
    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    விஸ்வாசம் என்ன மாதிரியான கதை என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் குறித்த புதுப்புது தகவல் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றங்களில் நடிக்கிறார்.

    இந்த நிலையில், சமீபத்தில் படத்தின் இயக்குநர் சிவாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, விஸ்வாசம் படம் குறித்து கேட்டனர். அவர்களிடம் “இது, தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம்” என்று சிவா பதில் அளித்தார். அதைக்கேட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். 



    இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தில் கவுதம மேனனின் ‘என்னை அறிந்தால்’ கனெக்‌ஷன் ஏற்பட்டுள்ளது. #Ajith #Viswasam
    கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும் மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.

    அஜித் அனிகா நடிப்பில் உருவான உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது படமான விசுவாசத்திலும் அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.



    விசுவாசம் படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அண்ணன் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். வடசென்னையை கதை களமாக கொண்ட இப்படத்தில் ஒரு அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் எனக்கூறப்பட்டு வருகிறது.
    `என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா, அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் `விஸ்வாசம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Viswasam #AjithKumar #Nayanthara
    அஜித் நடிப்பில் `விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 



    சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். 

    மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara

    ×