search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெலிகிராம் சிஇஓ"

    • டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் பாரிசில் கைது செய்யப்பட்டார்.
    • இந்த கைதுக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    அபுதாபி:

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்தக் கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

    இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டியம் இருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

    அபுதாபியில் பிரெஞ்சு கடற்படை தளம் இயங்கி வருகிறது. அதேசமயம், பிரான்சிடமிருந்து லெக்லெர்க் டாங்கிகள் மற்றும் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயன்படுத்தி வருகிறது. மேலும் சில போர் விமானங்களை வாங்க யுஏஇ அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. துரோவ் கைது எதிரொலியால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக யு.ஏ.இ. அறிவித்துள்ளது.

    ×