search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் திரையுலகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளது.
    • யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.

    மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் திரை உலகமே நிலை குலைந்து போய் உள்ளது. இந்த சம்பவத்தால் மலையாள திரை உலக அமைப்பான அம்மா அமைப்பு தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.

    கேரளாவில் திடீரென வெடித்துள்ள இந்த சம்பவம் அங்கு மட்டுமின்றி அனைத்து திரை உலகிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. சில தினங்களாக ஒவ்வொரு நாளும் பல நடிகைகள் புதிய பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஷகிலா தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    மலையாள திரை உலகில் இருப்பது போன்று தமிழ் திரையுலகிலும் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இதைவிட அதிகமாகவே இருக்கிறது.

    இந்தியை பொறுத்தவரை அப்படி அல்ல. அவர்கள் உடனே நண்பர்களாக மாறி விடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சனை இருக்காது. ஆனால் அங்கு நெபாடிசம் பிரச்சனை உள்ளது.

    அதாவது புதிய நடிகர்கள் யாரையும் வளரவிடாமல் தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக்க முயற்சிப்பது போன்ற பிரச்சனை உள்ளது.

    தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளது. இவை எல்லாம் பேசி வைத்துக் கொண்டுதான் செய்யப்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும் தனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு சம்மதித்துதான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சனைகள் வருகிறது.

    குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×