search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாஸ் தமிழ்"

    • பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
    • ப்ரோமோ வீடியோ சென்னை உள்பட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மக்களால் வெளியிட ஏற்பாடு.

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

    கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

    7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்தது.

    இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமா வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    முன்னதாக ப்ரோமோ வீடியோக்கள் டிவி சேனலிலேயே வெளியிடப்பட்டு வந்த நிலையில், இம்முறை மாற்று முயற்சியாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ சென்னை உள்பட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மக்களால் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, சென்னை பெசன் நகர், திருச்சி பிரீஸ் ஓட்டல், மதுரை அம்பிகா கலை கல்லூரி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி- பெல் ஸ்கூல், விருதுநகர் அப்சாரா சினிமாஸ், வேலூர்- பழைய பேருந்து நிலையம், கடலூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொது மக்கள் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர்.

    ×