என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைத்ரா ஆச்சார்"
- சுகந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு டிராவல் விலாக்கர் ஆவார்.
- அவரது சமீபத்திய வீடியோவில் பெங்களூருவை பற்றி கூறிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சுகந்த் ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு டிராவல் விலாக்கர் ஆவார். அவரது சமீபத்திய வீடியோவில் பெங்களூருவை பற்றி கூறிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அவரது வீடியோவில் அவர் " வட இந்திய மக்களே பெங்களூரு ஊரை உருவாக்கினார்கள். இந்த ஊர் வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் இல்லையென்றால் பெங்களூரு மக்களால் வாழ முடியாது. வட இந்தியர்கள் பெங்களூருவை காலி செய்தால். என்ன நடக்கும் எப்படி பிஜி மற்றும் ஹாஸ்டல் ஓனர்ஸ் எப்படி பணம் சம்பாதிப்பார்கள். மது விடுதியில் யார் நடனம் ஆடுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது. இதனை கண்டித்து பல கன்னட திரையுலக நடிகர்கள் எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். பிரபல நடிகை சைத்ரா ஆசார் " நீங்கள் தயவு செய்து போய்விடுங்கள் பெங்களூரு ஊரை விட்டு. எப்படி பெங்களூர் காலியாக இருக்கிறது நாங்கள் பார்க்க ஆசைப்படுகிறோம். நீங்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியும்." என கூறியுள்ளார்.
நடிகை வர்ஷ பொல்லாம்மா " தயவு செய்து கிளம்புங்கள்" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மார்ச் மாதம் 8 ஆம் தேதி Blink கன்னட திரைப்படம் வெளியானது.
- இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீனிதி பெங்களூரு இயக்கினார்.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி Blink கன்னட திரைப்படம் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீனிதி பெங்களூரு இயக்கினார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படம் ஒரு Sci-Fi திரைப்படமாகும். 24 வயது கதாநாயகன் தனித்து வாழ்ந்து வருகிறான். அவனுடைய காதலியின் உதவியால் வாழ்க்கையை நடத்தி வருகிறான். இப்படி சென்று கொண்டு இருக்கும்போது அவனது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு முதியவரை சந்திக்கிறான். அதன் பிறகு அவனின் கடந்த காலத்தை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, சைத்ரா, மந்தரா பட்டஹல்லி, கோபால் கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் வரவேற்பை தொடர்ந்து படத்தை தமிழ் மற்றும் பிற மொழிகளில் டப் செய்துள்ளனர்.
இத்திரைப்படம் தமிழில் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டைம் டிராவல் மற்றும் சை ஃபை திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்கும் எனில் இத்திரைப்படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க.