என் மலர்
நீங்கள் தேடியது "மந்திரி சுரேகா"
- சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் அல்ல.
- பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் மந்திரி அறிக்கை
திருப்பதி:
தெலுங்கானா மாநில காங்கிரஸ் பெண் மந்திரி கொண்டா சுரேகா. இவர் நேற்று பேட்டியளித்தார்.
அப்போது நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தான் காரணம் என கூறினார். இது தெலுங்கு திரை உலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவருடைய கருத்துக்கு நடிகைகள் சமந்தா, அமலா, நடிகர் நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். அரசியலுக்கு எங்களை இழுக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
இதேபோல் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே மந்திரி சுரேகா தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
24 மணி நேரத்திற்குள் பெண் மந்திரி மன்னிப்பு கேட்க தவறினால் அவதூறு வழக்கு மற்றும் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
இந்த நிலையில் சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் மந்திரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கே.டி.ராமராவ் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பான்மையை கொண்டவர் என்பதே தனது கருத்துக்களின் நோக்கம். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் அல்ல.
சமந்தா தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம், அவரது அபிமானம் மட்டுமல்ல அவர் பெண்களுக்கு முன்மாதிரியும் கூட.
சமந்தா அல்லது அவரது ரசிகர்களும் என்னுடைய கருத்துக்களால் புண்பட்டிருந்தால் அந்த கருத்துக்களை திரும்ப பெறுகிறேன். வேறு விதமாக எனது கருத்தை நினைக்க வேண்டாம். என்னுடைய கருத்தை நிபந்தனை இன்றி வாபஸ் பெறுகிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.