என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்"
- ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வான்டா:
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தின் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீன தைபே வீராங்கனையான சங் ஷோ யுன் உடன் மோதினார்.
இதில் பன்சோத் 21-19, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மாளவிகா பன்சோத் இந்தப் போட்டியை 57 நிமிடங்களில் விளையாடி வெற்றியைக் கைப்பற்றினார்.
சீன தைபேயின் சங் ஷோ யுன் தரவரிசையில் உலகின் 23-வது நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
வான்டா:
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, கனடா வீராங்கனையான மிச்செல் லீ உடன் மோதினார்.
இதில் பி.வி.சிந்து 16-21, 10-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
பிவி சிந்து இந்தப் போட்டியில் 37 நிமிடங்களில் விளையாடி தோல்வி அடைந்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு களமிறங்கிய பிவி சிந்துவின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
வான்டா:
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீன தைபே வீரரான சோ டின் சென் உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 21-19, 18-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.