என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நோயல் டாடா"
- டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். மும்பையில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்பட்டது.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
இந்நிலையில், நோயல் டாடாவால் ஒரேநேரத்தில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்க முடியாது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் டாடா அறக்கட்டளை அல்லது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மட்டும் தான் இருக்க முடியும்.
டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு வர நோயல் டாடா விரும்பினார். ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.
இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவராக டிசிஎஸ் சிஇஓவாக இருந்த என்.சந்திரசேகரனை ரத்தன் டாடா நியமித்தார்.
ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளை 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோரபஜி டாடா அறக்கட்டளை ஆகியவை முக்கிய அறக்கட்டளைகள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் டி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது.
- டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா ஸ்டீல், வாட்ச் நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நோயல் டாடா உள்ளார். நோயல் டாடா 2000-களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.
சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் கூட்டத்தைத் தொடர்ந்து, டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார். டாடா டிரஸ்ட் என்பது அனைத்து 14 டாடா அறக்கட்டளைகளின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அமைப்பாகும்.
எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதை விரும்பும் நபராக நோயல் டாடா அறியப்படுகிறார். இவர் 2014 முதல் ட்ரெண்ட் லிமிடெட் தலைவராக பணியாற்றி வருகிறார்.
2019 இல் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் டாடா சேர்ந்தார். இவர் 2018 இல் டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், மார்ச் 2022 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் டாடா குழுவிற்குள் தனது பங்கை மேலும் வலுப்படுத்தினார்.
ட்ரெண்டிற்குச் செல்வதற்கு முன், நோயல் டாடா 2010 மற்றும் 2021 க்கு இடையில் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். அவரது பணியின் போது, நிறுவனத்தின் வருவாய் $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்தது.
வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நோயல் டாடா உள்ளார். அவரது மூன்று குழந்தைகள் - நெவில், மாயா மற்றும் லியா - டாடா குடும்பத்துடன் இணைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
டாடா குழுமத்தை நிறுவிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1892 ஆம் ஆண்டில் நோயல் மற்றும் ரத்தனின் பெரியப்பா ஜம்செட்ஜி டாடா அவர்களால் டாடா டிரஸ்ட்ஸ் அமைக்கப்பட்டது. டாடா அறக்கட்டளைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்