என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி இந்தியா லீக்"

    • ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடத்தப்படுகிறது.
    • டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கும் இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    புதுடெல்லி:

    ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கும் இந்த போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதற்கான வீரர்களின் 3 நாள் ஏலம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ.78 லட்சத்திற்கு விலை போனார்.

    அவரை சூர்மா ஹாக்கி கிளப் வாங்கியது. மற்ற இந்திய வீரர்கள் அபிஷேக் ரூ.72 லட்சத்திற்கும் (ஷிராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணிக்கு), ஹர்திக் சிங் ரூ.70 லட்சத்திற்கும் (உ.பி. ருத்ராஸ்), அமித் ரோகிதாஸ் ரூ.48 லட்சத்திற்கும் (தமிழ்நாடு டிராகன்ஸ்) ஏலத்தில் எடுக்கப்பட்டனர். தமிழக வீரர் செல்வம் கார்த்தியை ரூ.24 லட்சத்திற்கு தமிழக அணி சொந்தமாக்கியது.

    அயர்லாந்து கோல் கீப்பர் டேவிட் ஹர்டே (ரூ.32 லட்சம், தமிழ்நாடு டிராகன்ஸ்), நெதர்லாந்தின் டுகோ டெல்கென்கம்ப் (ரூ.36 லட்சம், தமிழ்நாடு), ஜெர்மனியின் ஜீன் பால் டேன்பெர்க் (ரூ.27 லட்சம், ஐதராபாத் அணி), நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் (ரூ.25 லட்சம், ஷிராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ்) ஆகியோரும் கணிசமான தொகைக்கு விலை போனார்கள்.

    • தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் பெங்கால் டைகர்சை நேற்று எதிர் கொண்டது.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்சை வீழ்த்தியது.

    ரூர்கேலா:

    8 அணிகள் பங்கேற்கும் ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது.

    சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சூர்மா கிளப்பிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் (1-4) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் கலிங்கா லான்செஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் (6-5) வென்றது. 3-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராவையும், 4-வது போட்டியில் 6-5 என்ற கணக்கில் கோனாசிகாவையும் வீழ்த்தியது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 5-வது ஆட்டத்தில் பெங்கால் டைகர்சை நேற்று எதிர் கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக கார்த்தி செல்வம் 16-வது நிமிடத்திலும், உத்தம் சிங் 37-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெங்கால் அணிக்காக ரூபிந்தர்பால் சிங் 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த வெற்றி மூலம் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்கால் அணி 9 புள்ளியுடன் 2-வது இடத்துக்கு பின்தங்கியது. தமிழ்நாடு டிராகன்ஸ் 6-வது போட்டியில் டெல்லி பைப்பர்சை 13-ந்தேதி சந்திக்கிறது.

    • கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
    • தமிழ்நாடு டிராகன்ஸ் அரைஇறுதியில் பெங்கால் டைகர்சை சந்திக்கிறது.

    ரூர்கேலா:

    8 அணிகள் பங்கேற்ற ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் தனது 10-வது போட்டியில் உ.பி. ருத்ரா அணியை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது. டிராகன்ஸ் அணிக்காக ஜின் ஜான்சென் (32-வது நிமிடம்) , தாமஸ் சோர்ஸ்பி (53-வது நிமிடம்) ஆகியோரும் உ.பி. அணிக்காக சுதீப் சிர்மாகோ (8-வது நிமிடம்), லலித் குமார் (15-வது நிமிடம்) ஆகியோரும் கோல் அடித்தனர். பின்னர் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

    கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. மயிரிழையில் வெளியேற்றப்படுவதில் இருந்து தப்பியது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் 6 வெற்றி (பெனால்டி ஷூட் 2) , 4 தோல்வியுடன், (பெனால்டி ஷூட் 2) 18 புள்ளிகள் பெற்று 4- வது இடத்தை பிடித்தது. பெங்கால் டைகர்ஸ், சூர்மா ஹாக்கி கிளப் (தலா 19 புள்ளிகள்), ஐதராபாத் டூபான்ஸ், 18 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து முன்னேறின. உ.பி. ( 17 புள்ளி), கலிங்கா லான்செர்ஸ், கோனசிகா (தலா 12 புள்ளி), டெல்லி பைபர்ஸ் 5 புள்ளி) ஆகிய அணிகள் 5 முதல் 8- வது இடங்களை பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். அரைஇறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது. தமிழ்நாடு டிராகன்ஸ் அரைஇறுதியில் பெங்கால் டைகர்சை சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் சூர்மா ஹாக்கி கிளப் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    ×