என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிருஷ்ண வம்சி"
- தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து 2003-ல் ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார்.
- ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை நேசிப்பவர்.
தமிழ் திரையுலகில் 1980-களில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ரம்யா கிருஷ்ணன் பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். பக்தி படங்களில் அம்மன் வேடம் ஏற்று நடித்து இருந்தார்.
ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்தும் பெயர் வாங்கினார். தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து 2003-ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனும், கிருஷ்ண வம்சியும் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது
இதற்கு கிருஷ்ண வம்சி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதை வைத்து நாங்கள் பிரிய இருப்பதாக வதந்திகள் பரப்பி உள்ளனர். இதில் உண்மை இல்லை.
நாங்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் இப்படி வதந்தி பரவி இருக்கலாம். ஆனால் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம். ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை நேசிப்பவர். மிகவும் புத்திசாலி'' என்று சொல்லி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.