என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை மீனாட்சி சவுத்ரி"

    • ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்காது.
    • சினிமாவுக்கு வந்த உடனேயே வித்தியாசமான கதைகளில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து விஜய்யின் தி கோட் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான லக்கி பாஸ்கர் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள பேட்டியில், "வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வப்படுகிறேன். நல்ல வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவுக்கு வந்த உடனேயே வித்தியாசமான கதைகளில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நல்ல கதைகளிலும், கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று எல்லைகள் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.

    ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்காது. அப்படி நடிப்பதை ரசிகர்களும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால் தான் வித்தியாசமான கதைகளை தேடுகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்புகள் என் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டன.

    நான் சினிமாவில் அடி எடுத்து வைத்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. நடிகையாக வேண்டும் என்பது எவ்வளவோ பேரின் கனவு. எந்த சினிமா பின்னணியும் இல்லாமலே வந்து மூன்று மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மீனாட்சி சவுத்ரி ‘தி கோட்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
    • துல்கர் சல்மானுடன் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து விஜய்யின் 'தி கோட்' மற்றும் 'சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

    துல்கர் சல்மானுடன் நடித்த 'லக்கி பாஸ்கர்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

    இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரியும், தெலுங்கு நடிகர் சுஷாந்தும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் 'இச்சடா' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

    சுஷாந்த் தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் சகோதரி மகன் ஆவார். நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா திருமணம் முடிந்ததும், இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • லக்கி பாஸ்கர் படத்தில் மனைவியாக நடித்து இருந்த எனக்கு பாராட்டுகள் கிடைத்தது.
    • வரும் காலங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

    தமிழில் விஜய்யுடன் தி கோட், விஜய் ஆண்டனியின் கொலை, ஆர்.ஜே.பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி திரையுலக்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

    துல்கர் சல்மான் ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் தொடர்ந்து சில படங்களில் மனைவி கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறேன்.

    லக்கி பாஸ்கர் படத்தில் மனைவியாக நடித்து இருந்த எனக்கு பாராட்டுகள் கிடைத்தது. ஆனாலும் சிலர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே மனைவி கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருப்பதுதான் நல்லது. அப்படி நடிக்க உனக்கு இன்னும் காலம் இருக்கிறது என்றனர்.

    எனவே வரும் காலங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன். அடுத்து ஒரு அதிரடி சண்டை படத்தில் நடிக்க இருக்கிறேன். இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன்'' என்றார்.

    ×