search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேச அணி"

    • உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
    • டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழ்நாடு,டெல்லி, கேரளா உள்பட 30 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 4-வது நாளான இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் 'எப்' பிரிவில் உள்ள உத்தர பிரதேசம்-டெல்லி அணிகள் மோதின. இதில் உத்தர பிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (4-வது நிமிடம்), அருண் விகாரி (19), மனிஷ் விகாரி (20) பரால் முகமது (26) கோல் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் கோவிந்த் சிங் 17-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

    உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே கேரளாவை 6-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இன்று மாலை 3.45 மணிக்கு அந்தமான் நிகோபாரை சந்திக்கிறது. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ஆந்திராவை 7-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' செய்தது. கால் இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் தமிழக அணி அந்தமான் நிக்கோபாரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

    ×