search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீரி மாணவர்கள்"

    • தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    நர்சிங் கல்லூரியில் படிக்கும் காஷ்மீரி மாணவர்கள் வகுப்புகள் மற்றும் மருத்துவ பணிகளில் பங்கேற்ப தங்களது தாடியை ஷேவ் செய்ய வேண்டும் அல்லது மிக குறைவான அளவு தாடி இருக்குமாறு ட்ரிம் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு மருத்துவ அமர்வுகளின் போது அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், "கல்லூரியின் வழிகாட்டுதல்கள் மாணவர்களின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை மீறுவதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் காஷ்மீரி மாணவர்களுடன் கலந்து பேசி அவர்கள் தாடி வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.

    ×