என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரை முழு நிலவு திருவிழா"

    • சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
    • மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.

    சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொளள அன்புமணி நியமனம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025ம் ஆண்டில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.

    சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

    மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.

    சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

    சமூக நீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என தெரிவிக்க வேண்டும்./ அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும்.

    மாநாட்டுக்கு வரும் வழியில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்துவிடாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

    • 12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
    • 2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழுநிலவு திருவிழா நடத்த பாமக மற்றும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

    மாமல்லபுரத்தில் ஏற்கனவே நடத்திய மாநாட்டில் கலவரம் ஏற்பட்டதால் 12 ஆண்டுகள் சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

    வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் சித்திரை திருவிழா நடத்த கோரிய நிலையில் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

    2025-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார்.
    • அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ம.க., வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு புதுச்சேரி பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகாபலிபுரத்தில் நடைபெறும் பா.ம.க. சித்திரை திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது:-

    வன்னியரான ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக உள்ளார். ஆனால் அவர் வன்னியராக நடந்து கொள்வதில்லை. வன்னியருக்கு இருக்கக்கூடிய வீரம், உறுதி அவரிடமில்லை. யாரைப் பார்த்தாலும் வழவழப்பான சிரிப்பு. அதிலேயே அனைவரையும் கவிழ்த்து விடுகிறார்.

    முதலமைச்சர் வீட்டு வாசலில் கொலை நடக்கிறது. மாதம் தோறும் கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதற்கு சளைக்காமல் தமிழ்நாடு வந்து விட்டது. தமிழகத்தில் கொலை சாதாரணமாகி விட்டது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்திரை திருவிழா வன்னியர் சங்கத்தின் இளைஞர் மாநாடு மகாபலிபுரத்தில் நடத்தப்படும். போலீசார் தடுத்தாலும் தடையை மீறி மாநாடு நடத்தப்படும். மாநாட்டிற்கு இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.

    சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார். அடுத்தும் எங்க ஆட்சி தான் என ஆட்டம் போடுகிறார். இதுக்கு போட்டியாக அடுத்து ஒரு சினிமா நடிகர் வந்துள்ளார். அவர் ஒரு கூட்டம் போட்டு 2026-ல் ஆட்சி என்கிறார். அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×