என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்"
- ஆடுஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிரித்விராஜ் வென்றார்.
இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை (HMMA) 'ஆடுஜீவிதம்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Maestro @arrahman 's winning note for Best original score foreign film language at @HMMAwards #Aadujeevitham pic.twitter.com/xmPYtqAHjO
— JaiHoARRClub (@JaiHoARRClub) November 21, 2024
- கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
- 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் சொத்துமதிப்பு ரூ.1728 கோடி முதல் ரூ.2100 கோடி வரை இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், இசை நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம் பாடல் பாடுவதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
- 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
சென்னை:
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.
இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
- சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார்.
- ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைவரும் பாட்டைக் கேட்டு பாராட்டினர்.
சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் சமீபகால சென்சேஷனாக இருந்து வருகிறது. இசை, குரல், பாடல் வரிகள், நடனம் என அனைத்திலும் இந்த பாடல்கள் ஸ்கோர் செய்துள்ளன. சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். தனது முதல் பாடலிலேயே ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த சாய் அபயங்கர், பாடல் குறித்த சுவாரஷ்யமான விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹுமானுடன் வேலை பார்த்த ஹென்ரி குருவிலா தனது குரு என தெரிவிக்கும் சாய், அவரிடமே இசை தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார். முதலில் 'கட்சி சேர' பாடலை கேட்ட ஏ.ஆர் ரகுமானுக்கு பாடல் பிடித்துப்போகவே அதை ஷேர் செய்துள்ளார். தொடர்ந்து ஜி.வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், அனிருத் என அனைவரும் பாட்டைக் கேட்டு பாராட்டினர்.
முக்கியமாக நடிகர் தனுஷ், பாடல் நல்லா இருக்கு, குரல் நல்லா இருக்கு, செம்ம கேட்சியா இருக்கு, கண்டிப்பா ஹிட்டாகும் என்று சொல்லி பாராட்டினார் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி கட்சி சேர பாட்டும், ஆச கூட பாட்டும் ஹிட்டாகியுள்ளது. சாய் அபயங்கர் அடுத்து என்ன பாட்டுடன் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் நடிக்கிறார்.
- படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார்.
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பிறகு ராம் சரண் பான் இந்தியா படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். ராம் சரணின் 16வது படமான இதற்கு தற்காலிகமாக 'RC 16' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி காபூர் நடிக்கிறார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த ஊபென்னா படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார்.
இந்த படம் அதிக பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பான் இந்தியா படம் என்பதால் இதில் தெலுங்கு மட்டுமின்றி பல மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று [ஜூலை 12] சிவராஜ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு RC 16 படக்குழு அவர் படத்தில் இணைந்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பல வருடங்களாக இண்டஸ்ட்ரியில் இருந்தாலும் சிவராஜ் குமார் இதுவரை தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்பதால் ராம் சரணின் இந்த புதிய படத்தின்மூலம் சிவராஜ் குமார் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க உள்ளார். கடைசியாக சிவராஜ் குமார் நடிப்பில் 'கோஸ்ட்' படம் வெளியாகியிருந்தது. அதற்கு முன்னர் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் சிவராஜ் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிரபு மாஸ்டர் - ஏ.ஆர்.ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது
- Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இந்த படத்தை இயக்குகிறார்
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என இந்திய சினிமாவில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏஆர் ரகுமானின் துள்ளலான இசைக்கு காலேஜ் ஸ்டூடென்ட்டாக நடித்த பிரபுதேவாவின் ஸ்டைலான நடன அசைவுகள் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கச் செய்தது.
இந்த படத்துக்கு பிறகு பிரபு மாஸ்டர் - ஏஆர்ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், ரகுமானும் இணைந்துள்ளனர். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் குறித்த அபேடேட்டுக்கு ரசிகர்கள் தவம் கிடந்த நிலையில் படத்துக்கு 'மூன் வாக்' என்று பெயரிட்டுள்ளதாக Behindwoods நிறுவனம் டைட்டில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் சிரியுங்கள், பாடுங்கள், உடன் சேர்ந்து நடனமாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார்.
- அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது அப்பா ரஜினிகாந்திற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "என் இதயத்துடிப்பே. நீங்கள்தான் என் எல்லாமே, லவ் யூ அப்பா" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்
- நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது
மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வளவு பெரிய சூரியனை கையில் இருக்கும் குடை காத்து நிழல் கொடுக்கும். அது போல நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது" என்று மறைந்த நடிகர் குமரிமுத்து நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார்
ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், இளையராஜாவை ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் பேச்சை, கங்கை அமரன் கண்டித்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் பதிவும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
- ரூ.1,000 கோடி பொருட்ஸ்லவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராமாயணம் திரைப்படம் தயாராகிறது
- இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர்
ராமாயணம் கதையை மையமாக வைத்து நிதிஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அனுமாராக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது.
ரூ.1,000 கோடி பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் தயாராகிறது. படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் படக்குழு ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து இசையமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதானவர் ஹான்ஸ் ஜிம்மர். 1980 முதல் இசையமைத்து வருகிறார். 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
லயன் கிங், இன்டெர்ஸ்டெல்லர், மேன் ஆப் ஸ்டீல், டார்க் நைட் டிரிலாஜி, இன்செப்சன் போன்ற படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகளை வாங்கியுள்ளார். இவர் ஆஸ்கர் விருதினை 2 முறையும், கிராமிய விருதினை 4 முறையும், கோல்டன் குளோப் விருதினை 3 முறையும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் இரண்டு ஆஸ்கார் வெற்றியாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். ஹான்ஸ் ஜிம்மர் இந்திய படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது
- இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது
பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசை கூட்டணியில் புதிய படத்தை முதன் முதலாக 'பிகைண்ட்வுட்ஸ்' சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.
இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.
காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்."
இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணையும் 6-வது கூட்டணியை குறிக்கும் வகையில் 'arrpd-6' என தற்காலிகமாக இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது. 2025 - ல் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
- லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும்
- சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது. பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பிருத்விராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்