என் மலர்
நீங்கள் தேடியது "ஃபெங்கல்"
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்.
- சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும். தற்போது தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புதுவையில் இருந்து 420 கிலோமீட்டர், நாகையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது நவம்பர் 30 ஆம் தேதி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
- மேலும் 12 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று ஓரளவிற்கு 66- 75 கி.மீ. வேக காற்றுடன் சுறாவளி புயலாக மாறி நாளை காலைக்குள் வலுப்பெற்ற வாய்ப்புள்ளது.
நேற்று மாலையே ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுப்பெறுவதில் மேலும் 12 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.
- தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.
கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 30ம் தேதி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.
தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) கரையை கடக்கிறது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புயலாகவே நாளை கரையை கடக்கும்.
- புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே புதுச்சேரிக்கு அருகே நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாகவே நாளை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக உருவாக வாய்ப்பில்லை என நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது புயல் உருவாக உள்ளது.
- வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் நாளை புயலாகவே கரையை கடக்கும்.
- புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவாகிறது. வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் நாளை புயலாகவே கரையை கடக்கும்.
நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
- நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
- சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.
இது அடுத்த 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
- சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.
3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் இருந்து காரைக்கால் வரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மதியம் அல்லது இரவு வரை தொடர்ச்சியான அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
- புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.
3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
நாகையிலிருந்து தென்கிழக்கே 260 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 270 கி.மீ., தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.
- 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய ஃபெங்கல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.
- புயலால் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியதன் எதிரொலியால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திடீர் காற்று மற்றும் மழை உருவாவதை எச்சரிப்பது 3ம் எண் கூண்டு ஆகும்.
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.ப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதை எச்சரிப்பது 5ம் எண் கூண்டு ஆகும்.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் வலதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பைத தெரிவிப்பது 6ம் எண் கூண்டு ஆகும்.
கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என எச்சரிப்பது 7ம் எண் புயல் கூண்டு ஆகும்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
- புயல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது. இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் ஃபெங்கல் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புயல், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி, டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகள், மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மின்சேவை, மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.