என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திபு நிணன் தாமஸ்"

    • திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.
    • 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது சிறந்த இசையமைப்பால் இந்திய இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் வெளியான படங்களில் 'கனா', 'பேச்சுலர்' படத்தின் 'அடியே' பாடல், சித்தார்த்தின் 'சித்தா' என அடுத்தடுத்து இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

    அதுமட்டுமல்லாது, 2024 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 'ARM' மலையாளப் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். அவர் மெல்லிசைகளில் தான் அதிகம் கவனம் செலுத்துவார் என்ற எண்ணத்தை உடைத்து, 'டீசல்' படத்தில் கானா ஸ்டைலில் 'பீர் சாங்' மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.

    அவரது 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    'டீசல்' படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் மனு ஆனந்த் படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமைந்து இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×