என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபெஞ்சல் புயல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மின் கம்பி விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையிலான புறநகர் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பீச் ரெயில்வே நிலையம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பீச் ரெயில் நிலையம் வழியாக செல்கிறது.

    பீச் ரெயில்வே நிலையம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் ரெயில்களின் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகாரித்துள்ளதால் ரெயில்கள் செல்லும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வியாசர்பாடி பாலம் செல்லாமல் பீச் ரெயில்வே நிலையம் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பீச் ரெயில் நிலையம் வழியாக செல்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • மழை காரணமாக சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிலையத்தில் உள்ள மக்கள் வசதிக்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. விமான நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
    • சென்னை நுங்கம்பாக்கத்தில் காலை 5 மணி முதுல் 8.30 மணி வரை 45 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கிறது.

    மயிலாடுதுறை முதல் திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் காலை 5 மணி முதுல் 8.30 மணி வரை 45 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் இதுவரை 95 மி.மீ, நந்தனம் 82 மி.மீ, கொளப்பாக்கம் 102 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    நாளை சென்னை, திருள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.

    வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சியில் கனமழை பெய்யும்.

    2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும்.

    டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகம் 50 கி.மீ வேகத்தில் இருக்கும்.

    மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் காலை முதல் தற்போது வரை பெய்த மழை அளவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை அளவு பின்வருமாறு:-

    பேசின் பிரிட்ஜ் 163.2

    கத்திவாக்கம் 158.1

    தண்டையார்பேட்டை 152.4

    திருவொற்றியூர் 149.7

    ஆலந்துார் 141.9

    மீனம்பாக்கம் 137.6

    வடபழநி 136.2

    மதுரவாயல் 134.8

    சென்னை சென்ட்ரல் 131.7

    பெரம்பூர் 127.6

    நுங்கம்பாக்கம் 126.3

    அமிஞ்சிக்கரை 125.1

    மணலி 124.5

    கொளத்துார் 124.2

    அயப்பாக்கம் 122.7

    மாதவரம் 122.5

    வளசரவாக்கம் 122.4

    அடையார் 121.2

    புழல் 118.8

    மடிப்பாக்கம் 118.2

    ஐஸ்ஹவுஸ் 116.1

    சோழிங்கநல்லுார் 116

    மணலி புது டவுன் 111.2

    அண்ணா நகர் மேற்கு 108

    முகலிவாக்கம் 104.9

    அம்பத்துார் 87.3

    திரு.வி.க., நகர் 80.6

    பெருங்குடி 80.6

    ராஜா அண்ணாமலைபுரம் 76.5

    அண்ணா நகர் 76.2

    உத்தண்டி 72.9

    • புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
    • இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கக்கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் புயல் சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் இரவு 7.30 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக, சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் நீர்வரத்து 680 கன அடியாக உள்ளது. அதனால், பூண்டி ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 22.84 அடியாக உள்ளது.

    புழல் ஏரியில் 2928 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 17.10 அடியாக உள்ளது.

    சோழவரம் ஏரியில், 140 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 2.75 அடியாக உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில், நீர் இருப்பு 2368 மில்லியன் கன அடி உள்ள நிலையில், நீர் வரத்து 4764 கன அடியாக உள்ளது. இதனால் தற்போதைய நீர் மட்டம் 19.02 அடியாக உயர்ந்துள்ளது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் நீர்வரத்து 30 கன அடி உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 30.34 அடியாக உயர்ந்துள்ளது.

    • புயல், சென்னையில் இருந்து 90.கீமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
    • வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    புயல், சென்னையில் இருந்து 90.கீமீ தொலைவில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகளை IIB&F நிறுவனம் ஒத்திவைத்தது. வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
    • விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக வழக்கத்தை விட காற்றின் வேகம் 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் மோசமான வானிலையால் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

    விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை விமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • மாமல்லபுரம்- மரக்காணம் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு.

    வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 90 கி.மீ- மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ- புதுச்சேரியில் இந்து 80 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

    மாமல்லபுரம்- மரக்காணம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    மதியம் 3 மணி நிலவரப்படி எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், பொதுமக்களின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் சேகர் பாபு,மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மழையை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. புயல், மழையால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,700 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஹைட்ராலிக் மரம் அறுக்கும் இயந்திரம், ஹைட்ராலிக் ஏணி என 500 கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • மாமல்லபுரம்- மரக்காணம் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிப்பு.

    வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி "ஃபெஞ்சல் (FENGAL) புயலை" எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது.

    இதுவரை, மின்சாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லை, மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் கடுமையான மழை பெய்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையினை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழையுடன் பலத்த காற்று 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அவ்வாறான பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை கை நிறுத்தம் செய்ய அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 10,000 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

    மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகங்கள் மற்றும் அனைத்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்த அமைச்சர், மின் தடங்கல் ஏதேனும் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கவும் அறிவுத்தினார்.

    இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்கவும் பேரிடர் காலங்களில் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு இடம் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் உறுதி செய்தார்.

    அனைத்து அலுவலர்களும் தங்களது அலைபேசியை எந்த காரணம் கொண்டும் ஆப்( OFF) செய்து வைக்கக்கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.

    மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 

    ×