என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக பாஜக தலைவர்"
- கைது செய்யபட்டு மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன்? என போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை சென்னையில் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு மாலை 6 மணி ஆகியும் பாஜகவினரை விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது ?
மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன் ?
கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். 3 விமானங்களை விட்டுவிட்டேன்" என்றார்.
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்து சென்னை வளசரவாக்கம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாருடன் வாக்குவாதம் நடந்து வருகிறது.
அப்போது தமிழிசை கூறுகையில், " மாலை 6 மணிக்கு மேலாகியும் தங்களை விடுவிக்க மறுப்பது ஏன்?
கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?
இரவு 7 மணி ஆகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?" என்று ஆதங்கமாக பேசினார்.
இந்நிலையில், சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
- லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
- அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவின் மீது அறிஞர்கள் வைத்துள்ள மரியாதையை லண்டனில் கண்கூடாக பார்க்க முடிந்தது.
அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
தவெக தலைவர் விஜய் தனது கருத்துகளை மக்கள் முன்பு வைக்கும்போது நாங்களும் கருத்து கூறுவோம். விஜயை கேள்வி கேட்கும் நேரத்தில் நாங்கள் நிச்சயமாக கேள்வி கேட்போம்.
விஜயின் சித்தாந்தங்கள் திராவிட கட்சிகளை போன்று தான் உள்ளது. தவெக மாநாட்டுக்குப் பின் எத்தனை முறை விஜய் வெளியே வந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை தியாகி போல் கொண்டாடுவதா ?
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக பாராட்டுவோம்.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் நிச்சயமாக சரித்திர தேர்தலாக இருக்கும்.
தமிழக பாஜகவில் கடந்த 3 மாதமாக நிறைய வேலைகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.