என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு வெதர்மேன்"
- அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கி நிற்கிறது. பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
இந்நிலையில், சென்னையில் தற்போது பெய்து வரும் மழை அனேகமாக கடைசி மழையாக இருக்கும். இனி மழை குறையத் துவங்கி முழுமையாக நிற்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.