என் மலர்
நீங்கள் தேடியது "சங்கர் தயாள்"
- யோகிபாபு அடுத்ததாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார்
- இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.
யோகிபாபு அடுத்ததாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சில வாரங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக செல்லும் போது இயக்குனர் சங்கர் தயாள் மாரடைப்ப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது. கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து பரிசோதிக்கையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவரின் இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.