என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து கட்டணம் உயர்வு"

    • சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
    • புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.

    புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பிற்கு பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

    அதன்படி, ஏசி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், அதிகபட்சமாக ரூ.13-லிருந்து ரூ.17 ஆகவும் கட்டணம் உயர்வு.

    ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.10-லிருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்சமாக ரூ.26-லிருந்து ரூ.34 ஆகவும் அதிகரிப்பு. சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.

    புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.

    புதுச்சேரி எல்லைக்குள் ஏசி விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.30-லிருந்து ரூ.1.69 ஆக உயர்வு. புதுச்சேரி நகரத்திற்குள் வோல்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.70-லிருந்து ரூ.2.21 ஆக உயர்வு. புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.25-லிருந்து ரூ.30 ஆகவும் அதிகரிப்பு.

    • பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
    • தலைமையில் உயர்மட்டக் குழு நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அரசாணை .

    தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது.

    அப்போது, போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமித்து 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு வாதித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொது மக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×