என் மலர்
நீங்கள் தேடியது "கோடம்பாக்கம்"
- உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
- சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
கோடம்பாக்கத்தில் உள்ள பி.சி.கே.ஜி என்கிற அரசு பள்ளியில் பறை இசைத்த மாணவரை குறி வைத்து ஆசிரியர்கள் இருவர் படிக்க விடாமல் டார்ச்சர் செய்வதாக சமூக ஆர்வலர் குபேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுபோல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவன் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவன் கூறியிருப்பதாவது:-
என் பெயர் தமிழ். பி.சி.கே.ஜி அரசு பள்ளியில் படிக்கிறேன். கலைத்திருவிழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பறையிசை வாசித்தேன்.
அதன்பிறகிலிருந்து, சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
பள்ளிக்கு வந்தால் வகுப்பில் அனுமதிப்பதில்லை. என் சட்டையை கழட்டி சோதனை செய்கிறார்கள். பேண்ட் பேக்கெட்டுகளில் சோதனை செய்கிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்.
வகுப்புக்கு போனால் வர வேண்டாம்.. உனக்கு பாடம் சொல்லித்தர மாட்டேன். கீழே சென்று ஹெட் மாஸ்டரை பாருன்னு சொல்றாங்க.. கீழே போனால் வகுப்புக்கு போ.. தேர்வு வருதுன்னு சொல்றாங்க.. திரும்ப வகுப்புக்கு போனா ஏன் வந்தேன்னு கேக்குறாங்க..
படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்றாங்க..
இவ்வாறு அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
"பள்ளி விழாவில், பறையிசை அடித்தேன். அதிலிருந்து ஆசிரியர்கள் இருவர், 'நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ' என்கிறார்கள். படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள்" என்று சொல்லும் இந்த மாணவனின் வீடியோ அதிரவைக்கிறது.… pic.twitter.com/GMX3rncZJp
— Arulmozhivarman (@arulmozhi_25) December 26, 2024