search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்விளையாட்டு அரங்கம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார்.
    • 2-வது செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 'சிக்கன் குனியா' பாதிப்பில் இருந்து மீண்டு 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் 32 வயது இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்விளையாட்டு அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.

    ×