என் மலர்
நீங்கள் தேடியது "மாளவிகா பன்சோட்"
- பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் மற்றும் கனடா வீரர் யாங் மோதினர்.
இந்த ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. ஸ்டேடியத்தில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டதில் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நடந்தது. இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத்துடன் சீன வீரரான லி ஷிஃபெங் உடன் மோதினார். இதில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சீன வீரர் நாளை இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ்.பிரணாய் உடன் மோதவுள்ளார்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோட்டும் மலேசிய வீராங்கனையான கோ ஜின் வெய்-ம் மோதினார். இந்த ஆட்டத்தில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் மாளவிகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.