என் மலர்
நீங்கள் தேடியது "ஈஆர் ஈஸ்வரன்"
- மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறுவதற்காக சீமான் இவ்வாறு அவர் பேசுகிறார்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கு"ம் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது இந்த கருத்தை அவர் கூறுவது இடைத்தேர்தலை மனதில் வைத்து பேசுகிறார் என்று அர்த்தம்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறுவதற்காக சீமான் இவ்வாறு அவர் பேசுகிறார் என்று நினைக்கிறேன். பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை கூறி மக்களை திசை திருப்ப முடியாது" என்று தெரிவித்தார்.