search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரி ஹர வீரமல்லு"

    • இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

    தெலுங்கு திரையிலகின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். சினிமாவிலிருந்து அரசியலில் களம் கண்ட பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

    துணை முதல்வராக இருந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் பவன் கல்யாண் நடித்து வருகிறார். அவ்வகையில் ஹரி ஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் க்ரிஷ் இயக்கி வருகிறார்.

    இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , மலையாளம் என ஒரு பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான கேட்கணும் குருவே பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது. வரும் 17 ஆம் தேதி முழு பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலின் தமிழ் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.

    ×