என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க்ரிஸ் கோபாலகிருஷ்ணன்"

    • க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
    • கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் மீது போவி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், 2014-ம் ஆண்டு நான் இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணிபுரிந்தேன். அப்போது இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன், என் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி பணி நீக்கம் செய்தார். இது தொடர்பாக சாதிய ரீதியில் அவதூறுகள், அச்சுறுத்தல்களுக்கும் ஆளானேன், என்று கூறி உள்ளார்.

    துர்கப்பாவின் புகாரைத் தொடர்ந்து பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்போசிஸ் துணை நிறுவனர் சேனாபதி க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    இவர் மட்டுமின்றி, கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரய்யா, ஹரி உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ×