என் மலர்
நீங்கள் தேடியது "கானத்தூர் சம்பவம்"
- சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் சிலர் காரில் துரத்திச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் பயன்படுத்திய இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை.
- யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பு சட்ட மரபுகளுக்கே எதிரானதாக இருக்கிறது. ஆகவே தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை அறிமுகப்படுத்துகிறபோது கடுமையாக எதிர்ப்புகளை முன்வைத்தோம்.
அதன் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்த தலைவர்களை முறையாக பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. பலமுறை அவர்களை அந்த கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள்.
மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு அரசு பா.ஜ.க. அரசு என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் இந்த விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிரமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வாறு குற்றச்செயல்களை ஈடுபட்டவர்கள் வண்டியில் கட்சி கொடி கட்டி இருப்பதால் அதற்கு கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது. அவர்கள் மீதான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார்.
- குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்?
- கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புகாரளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட ஸ்டாலின் மாடல் அரசு, குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்?
அவர்கள் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
அல்லது, விவரங்களை வெளியிடவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ திமுக கொடி என்னும் "லைசன்ஸ்" தடுக்கிறதா? என்று தெரிவித்துள்ளது.
புகாரளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட ஸ்டாலின் மாடல் அரசு,குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்? அவர்கள் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?அல்லது, விவரங்களை… pic.twitter.com/HrUWCg9bTB
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 30, 2025
- காரை சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.
- மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 26.01 2025 அன்று செல்வி சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.012025 அன்று நள்ளிரவு சுமார் 02.00 AM அளவில் தான் (TN.13S5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN-75-E-6004, TN-09-BR-9988) வந்த 7-8 நபர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.
அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற செல்வி சின்னி திலங்க என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து அவர்களது காரை செல்வி. சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.
மேலும் மேற்படிகாரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக செல்வி. சின்னி திலங்க என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாக கூறியதை செல்வி. சின்னி திலங்க தரப்பு மறுத்துள்ளது.
மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.012025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s 126(2) 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது.
- மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
சென்னை:
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அ.ம.மு.க. கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த மதுபோதைக் கும்பல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், அப்பகுதியாக திமுக கொடி பொருத்திய காரில் வந்த மதுபோதை கும்பல் தகராறில் ஈடுபட்டிருப்பதோடு, துரத்திச் சென்று மிரட்டியது போலவும் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வரை திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது.
திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த மதுபோதைக் கும்பல் - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது ?சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 29, 2025
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
என்று டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது.
- சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலர் வழிமறித்து காரில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த பெண்களிடம்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 29, 2025
சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடிகட்டப்பட்ட காரில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
- திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் நள்ளிரவில் பெண்களை துரத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
சென்னை:
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் சென்று பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர்.
தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்து செய்த செயலை பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.
இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.
இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே மாநில அரசு காவல் துறைக்கு பேட்ரோல் வாகனங்களை வாங்கிக் கொடுத்து ரோந்து போகச் சொல்ல வேண்டும்.
கையாலாகாத தி.மு.க. அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என தெரிவித்துள்ளார்.
- இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?
- இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் மு.க.ஸ்டாலின்?
மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்த பெண்கள் அளித்த புகாரின்பேரில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை தி.மு.க. கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா?
தி.மு.க. கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது" என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் தி.மு.க. அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு!
இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?
இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் மு.க.ஸ்டாலின்? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?
#SaveOurDaughters
#பாலியல்பொறுக்கிகளை_விரட்டியடிப்போம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,சட்டம் இருக்கிறதா? காவல்துறை… pic.twitter.com/Z03hAuRLml
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 29, 2025