search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாம் தமிழர் கட்சி"

    • அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும்.
    • தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால்தான் நிதானம் வரும்.

    சென்னை:

    மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசி வன்முறையை தூண்டியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனிடையே, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அடுத்தவரை எரிச்சலூட்டும் விதமாகப் பேசுவதுதான் சீமானின் வழக்கமாக உள்ளது. அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால்தான் நிதானம் வரும். வன்முறை தூண்டும் வகையில் பேசக்கூடாது என சீமானுக்கு அறிவுரை வழங்குமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நிராகரித்ததுடன், இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது. குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

    ×