search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியலூர் கொள்ளை"

    • கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
    • கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கட்சிபெருமாள் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. கடந்த 14-ந்தேதி இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.

    மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு அதில் இருந்த 48 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், மேலும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர் பட்டப்பகலிலேயே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.

    இதுகுறித்து வசந்தா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. சீராளன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களூக்கு சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன்(வயது 27), மணிக்காளை(29), சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த அழகு பாண்டி(24), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசிங்(22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(24) ஆகிய 5 பேர் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் கொள்ளையர்கள் 5 பேரும் மதுரையில் பதுங்கி இருப்பதும் தெரிவந்தது. இதையடுத்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மதுரை சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, 40 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    ×