என் மலர்
நீங்கள் தேடியது "அசுதோஷ் சர்மா"
- கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன்.
- என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன்.
ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லக்னோ அணி வெற்றி பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விப்ராஜ் நிகம்- அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தது. குறிப்பாக கடைசி வரை அசுதோஷ் சர்மா வெற்றிக்காக போராடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இந்த பரபரப்பான போட்டியில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அசுதோஷ் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், கடைசி ஓவரில் நான் பதற்றமின்றி இருந்தேன். மோகித் சர்மா ஒரு ரன் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் சிக்சர் விளாசி போட்டியை முடிக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இருந்தது. என் விளையாட்டை நான் மிகவும் ரசித்தேன். என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது என கூறினார்.